மண்பாண்ட தொழிலாளர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க அனுமதி கோரி சார் ஆட்சியர்  அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-06-15 13:10 GMT

பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க அனுமதி கோரி சார் ஆட்சியர்  அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்..  பொள்ளாச்சி.. ஜூன்..15 கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை,  பொன்னாபுரம், செஞ்சேரிமலை உள்ளிட்ட கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் பாரம்பரியமாக மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் கிணத்துக்கிடவு அருகே உள்ள கோதவாடி குளத்தில் குயவன் குட்டை எனும் இடத்தில் பாரம்பரியமாக களிமண் எடுத்து மண்பாண்ட பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக களிமண் எடுக்க அனுமதி வழங்காததால் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது எனவே களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என மனன்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர் பொள்ளாச்சி சார்  ஆட்சியர் கேத்திரின் சரண்யாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்..  இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில் கிணத்துக்கடவு கோதவாடி குளத்தில் களிமண் எடுத்து பாரம்பரியமாக மண்அடுப்பு, பானைகள்,அகல் விளக்குகள், உருவாரா பொம்மைகள், கலசங்கள்,கஞ்சி கலயங்கள் உள்ளிட்ட மண்பாண்ட  பொருட்களைத யார் செய்து இதன் மூலம் வாழ்வாதாரத்தை பெற்று வருகிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக களிமண் எடுக்க அனுமதி வழங்காததால் 2000 குடும்பங்களாக இருந்த மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் தற்போது 50 குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..  ஆண்டுதோறும் களிமண் எடுக்க அனுமதி வழங்க கோரி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்து வருகிறோம் என வேதனை தெரிவித்த மண்பாண்ட தொழிலாளர்கள் இத்தொழிலைத் தவிர தங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாதது தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்துள்ளதால் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தக் கூட பணமில்லாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம் எனவே தமிழக அரசு எங்கள் நிலையை கருத்தில் கொண்டு களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.. பேட்டி - 01.காளிதாஸ்..02.மகாலிங்கம்.. மண்பாண்ட தொழிலாளர்கள்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..

Tags:    

Similar News