மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு

மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு.

Update: 2024-06-14 07:26 GMT

 பெற்றோர் மனு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அருங்குறுக்கை எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 40), தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி கோவிந்தம்மாள் (36) மற்றும் தனது மாற்றுத்திற னாளி குழந்தைகளான பிரபாவதி (18), வசந்த் (13), ஹரினா (9) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து, அவர் அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத் தார். அம்மனுவில், எனது குடும்பம் மிகவும் ஏழ் மையான குடும்பம். அன்றாடம் நான் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். என்னுடைய வருமானம், குடும்பத்தை கவனிக்கவும், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்கவும் போதவில்லை. எங்கள் குழந்தைகளில் பிரபாவதி, வசந்த் ஆகியோருக்கு மட்டும் அரசால் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஹரினாவுக்கும் அரசு சார்பில் மாதாந்திர உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் நாங்கள் அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை வீடு அமைத்து வசித்து வருகிறோம். எங்களுக்கு வேறு எங்கேயும், வீடோ, மனையோ கிடையாது. ஆகவே நாங்கள் குடியிருக்கும் இடத்திலேயே இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தார். மனுவைப்பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பர மேஸ்வரி, இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Tags:    

Similar News