இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு இருளர் குடியிருப்பு மக்கள் மனு

கோணமலை பகுதியை சேர்ந்த இருளர் குடியிருப்பு மக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர்.

Update: 2024-01-25 03:49 GMT

கோணமலை பகுதியை சேர்ந்த இருளர் குடியிருப்பு மக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பரதன்தாங்கல் ஊராட்சி கோணமலை பகுதியை சேர்ந்த இருளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பழங்குடி இருளர் இனத்தைச்சேர்ந்த நாங்கள் 19 குடும்பத்தினர் 5 தலைமுறையாக கோணமலை பகுதியில் நிரந்தரமாக வசித்து வரு கிறோம். தற்போது நாங்கள் ஆலம்பூண்டி தேசிய நெடுஞ்சாலை யில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் காட்டுப்பகுதியில் வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி வசித்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளாக வனத்துறையி னர் காட்டிலிருந்து எங்களை வெளியேறுமாறு தெரிவித்து வருகின்ற னர். இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. வனத்துறையினர், எந்த நேரத்திலும் எங்களை வெளியேற்றும் அபாயம் உள்ளதால் எங்களுக்கு இலவச வீட்டும னைப்பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Tags:    

Similar News