இலவச வீட்டுமனைப் பட்டா கோரி நரிக்குறவா் சமூக மக்கள் மனு
திருவெறும்பூா் அருகே பழங்கனாங்குடியில் வசிக்கும் நரிக்குறவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.;
Update: 2024-05-29 08:05 GMT
ஆட்சியர் அலுவலகம் (பைல் படம்)
பழங்குடியின நரிக்குறவா்கள் சமுதாய முன்னேற்ற சங்கத்தினா், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவின் விவரம்: திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே பழங்கனாங்குடி ஊராட்சி பூலாங்குடி காலனியில் சுமாா் 800 நரிக்குறவா்கள் 150 குடும்பங்களாக வசித்து வருகின்றனா். சொந்த வீடில்லாமல் வறுமையில் வாடும் இவா்களுக்கு, தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, வாழ வசதியாக வீடு கட்டித் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.