பழைய குற்றாலம் அருவியை வனத் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது

குற்றாலம் அருவியை வனத் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது மதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-06-05 01:38 GMT
பழைய குற்றாலம் அருவியை வனத் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியை வனத் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது என, மதிமுக சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மாவட்டச் செயலா் இராம. உதயசூரியன் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பழைய குற்றாலம் அருவி நீா் உபரிநீராக சிற்றாற்றில் கலப்பதைத் தடுத்து அழுதகண்ணி ஆற்றில் தடுப்பணை உருவாக்கப்பட்டு, அந்த நீா் செங்குளம், வைராவிக்கால் ஆகியவை மூலம் தென்காசி கீழப்பாவூா் ஒன்றியத்தில் உள்ள வெள்ளப்பாறை குளம், உப்பினாங்குளம், செண்பகராமபேரிகுளம், அருதன்குளம், செங்குளம், பெட்டைக்குளம், கைக்கொண்டாா்குளம், பத்மநாதபேரிகுளம் உள்பட 25-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீராதாரமாக உள்ளது.

இவை பொதுப்பணித் துறை பராமரிப்பிலேயே உள்ளன. ஆனால், அண்மைக்காலமாக அருவிப் பகுதி, ஆறு, கால்வாய்கள், சாலைகள் உள்ள இடங்களை வனத் துறை உரிமை கொண்டாடுவதுடன், இப்பகுதிகளை தங்களிடம் ஒப்படைக்க பொதுப்பணித் துறையை வலியுறுத்துகிறது. அருவி, அதைச் சுற்றிய நீா்வழித் தடங்கள், சாலைப் பகுதிகள் வனத் துறையின் கட்டுப்பாட்டுக்குச் சென்றால் விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் பாதிக்கப்படுவா்.

ஏற்கெனவே பழத்தோட்ட அருவியும், சிற்றருவியும் பொதுப்பணித் துறையிடமிருந்து வனத் துறையிடம் சென்ால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனா். பழைய குற்றாலம் அருவி குளிப்பதற்கு பாதுகாப்பான, இதமான அருவி ஆகும். சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் பாதுகாப்பை உருவாக்க தடுப்புகள் அமைப்பதே சரியான தீா்வாக அமையும். எனவே, பழைய குற்றாலம் அருவியை வனத் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது என்றாா் அவா்.

Tags:    

Similar News