முதுநிலை வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2024-06-24 14:44 GMT

திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பச்சூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட செத்தமலை கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள். இவருக்கு சொந்தமாக மேற்படி கிராமத்தில் நிலம் உள்ளது.இந்ந நிலமானது தமிழ்நாடு நில உடைமை பதிவேடு திட்டத்தின் (UDR)கீழ் வழங்கிய பட்டாவில் தவறுதலாக வேறொருவரின் பெயர் இடம்பெற்றுள்ளதை ரத்து செய்ய கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியார் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கு மனு அளித்துள்ளார்.

Advertisement

மனு அளித்ததன் பேரில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அவர்கள் விசாரணை செய்து அதன் அறிக்கையை திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு மேற்கொண்டு நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளார். பின்னர் இதன் தொடர்பான நடவடிக்கையை அறிந்து கொள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்து சுமார் 6 மாத காலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதை கண்டு முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரமணி அலுவலரிடம் பெருமாள் கேள்வி எழுப்பியுள்ளார். கேள்வி கேட்டததன் காரணமாக அலுவலர் தன்னை தொடர்ந்து அவமரியாதை சொற்களால் பேசி என்னை மனதளவில் காயத்திபடுத்திதாக கூறி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.

ஆனால் இந்நாளன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கிறார். எனவே அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் பெருமாள் அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மக்கள் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மேலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரமணி அவர்கள் இதை போன்று நிலம் சம்பந்தமான கோப்புகளை கையாளுவதில் காலம் கடத்தி பொதுமக்களை அலைக்கழித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News