ஆதிகருவண்ணராயர் கோயிலுக்கு வரும் வாகனங்களயும் அனுமதியளிக்க கோரி மனு
வனத்திலுள்ள ஆதி கருவண்ணராயர் கோயிலுக்கு வரும் அனைத்து வாகனங்களயும் அனுமதியளிக்க வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் வன சரகத்திக்குட்பட்ட கெஜரட்டி என்ற பகுதியில் உப்பிலி நாயக்கர் சமூக குலதெய்வமான ஆதி கருவண்ணராயர் திருக்கோயில் உள்ளது.
ஒவ்வொருவரும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்ய 3 நாட்களில் 15 ஆயிரம்முதல் 20 ஆயிரம் பேர் வருகை தந்துள்ள நிலையில் புலிகள் சரணாலயம் பகுதியில் நாள் ஒன்றுக்கு 100 வாகனங்கள் மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைக்காட்டி பிப்ரவரி 23 , 24 , 25. தேதிகளில் 300 வாகனங்கள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.
இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் குல தெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன் செய்ய முடியாமல் திரும்பி சென்றனர். இது தொடர்பாக அமைதியான முறையில் போரடிய இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் , 2025 ஆம் ஆண்டு மாசி மாதத்திற்கு வரும் அனைத்து வாகனத்தில் அனுமதிக்க வேண்டும் ,
ஒவ்வொரு அமாவாசை தினத்திற்கும் வரும் அனைத்து வாகனங்களையும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் அனுமதி வழங்க வேண்டும் என கூறி உப்பிலி நாயக்கர் சமூக சங்கங்கள் , அமைப்புகள் மட்டும் அறக்கட்டளை ஒருங்கிணைப்பு குழுவினர் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து மனு அளித்தனர்