அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகை கோரி கலெக்டரிடம் மனு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் மனு

Update: 2024-02-06 09:15 GMT

கலெக்டரிடம் மனு

நடப்பு ரபி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய 2023, நவம்பர் 15.ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது, சாகுபடிக்கு காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் போனது மற்றும் இ சேவை மையங்களில் உரிய இணைப்பு கிடைப்பதில் காலதாமதம், மின் தடை உள்ளிட்ட காரணங்களால் நவம்பர் 15-க்குள் பெரும்பாலன விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் போனதால் நவம்பர் 30-வரை விவசாயிகள் கால நீடிப்பு கேட்டதில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு நவம்பர் 22-வரை கால நீடிப்பு வழங்கியது.நவம்பர் 22.வரை பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொருத்த வரை காலத்தில் தண்ணீர் கிடைக்காமல்”போனதால் பெரும்பாலன விவசாயிகளால் சாகுபடி பணிகளை தொடர முடியவில்லை, தொடங்கப்பட்ட பல இடங்களில் நாற்றங்கால்கள் காயந்து போயின. பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் பிரதமரின்” பயிர் காப்பீடு திட்டத்தில் தடுக்கப்பட்ட விதைப்புக்கன (Prevented Sowig) இழப்பீடின் கீழ் பயிர் இழப்பீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள நேரத்தில்,திருச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் அனுமதி பெற்று காப்பீடு தொகை பெற்றுள்ள இப்க்கோ டோக்கியோ காப்பீடு நிறுவணம் 2023, நவம்பர் 15-வரை காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கமுடியும் நவம்பர் “15,க்குபின் 22,வரை காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இயலாது என கூறி வருவதாக தெரியவருகிறது. இதனால் பெரும் இழப்புகளுக்குள்ளான விவசாயிகள் பெரும் கலக்கத்தில்”உள்ளனர். எனவே தாங்கள் திருச்சி மாவட்டத்தில் நவம்பர் 22-2 பயிர் காப்பீடு” செய்துள்ள அணைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடுதொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுடுமென. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News