பாலியல் வன்முறை தடுப்பு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பாலியல் வன்முறை தடுப்பு பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரி செம்மலர் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
By : King 24x7 Angel
Update: 2024-01-22 12:00 GMT
தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகளும் வன்முறைகளும் இல்லாமல் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் பெண்கள் பணியாற்று வரை உறுதி செய்த பாலியல் வன்முறை தடுப்பு பாதுகாப்புகுறை தீர்ப்பு சட்டம் கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தால் பத்துக்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் யாரேனும் தொந்தரவு செய்தால் அவர்களுக்கென்று தனியாக புகார் குழுவும், புகார் பெட்டியும் நிறுவப்பட்டு ,மாவட்ட அளவில் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு அங்கு பணியாற்றும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும் என்பதும் பிரச்சனைகள் ஏதும் இருந்தால் சம்மந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆனால் இன்றுவரை இந்த சட்டம் பல ஊர்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளிலும், பெண்கள் பணிபுரியும் இடங்களில் முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும், உடனடியாக இந்த சட்டத்தை முறைப்படுத்தி அந்தந்த மாவட்ட அளவில் உள்ள புகார் குழுக்களில் அரசு அதிகாரிகளை நியமித்து முழுமையான செயல்பாட்டினை கொண்டு வர வேண்டும் எனவும், மேலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர மட்டுமே வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உடல் நல அட்டை வழங்கிட வேண்டும், பாலினம்,சாதி, மொழி ,வேறுபாடு இன்றி அனைவருக்கும் சமமான வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி , இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை விருது மாவட்ட செம்மலர் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.