ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

ராமநாதபுரம் குவைத்தில் இருந்து மும்பைக்கு மீன்பிடி படகில் தப்பி வந்த மீனவர் மீட்கக்கோரி மீனவரின் மனைவி ஆட்சியரிடம் கோரிக்கை.

Update: 2024-02-09 12:17 GMT
ராமநாதபுரம் குவைத் நாட்டில் இருந்து மீன்பிடி படகில் மும்பை தப்பி வந்த ராமநாதபுரம் மீனவரை மீட்கக்கோரி அவரது மனைவி ஆட்சியரிடம் மனு அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் நிடிசோ(31) என்பவரின் மனைவி விஜி(27). இவர் நேற்று தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் குவைத் நாட்டில் கொத்தடிமையாக நடத்தப்பட்டு மும்மை தப்பி வந்த தனது கணவரை மும்பை போலீஸாரிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தார். இதுகுறித்து மனைவி விஜி கூறியதாவது, எனது கணவர் நிடிசோ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு மீன்பிடி ஒப்பந்த தொழிலாளராக சென்றார். அங்கு அவரது முதலாளி அவரை சம்பளம், உணவு வழங்காமல் கொத்தடிமையாக நடத்தியுள்ளார். இதனால் எனது கணவர் தொலைபேசியில் தெரிவித்ததன்படி அவரை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என ராமநாதபுரம் ஆட்சியரிடம் 22.01.24 அன்று மனு அளித்தேன். இந்நிலையில் எனது கணவரும், கொத்தடிமையாக இருந்த கன்னியாகுமரி மாவட்ட 2 மீனவர்கள் என 3 பேரும் கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு மீன்பிடி படகு மூலம் 10 நாட்கள் பயணித்து கடந்த 6-ம் தேதி மும்பை வந்து சேர்ந்துள்ளனர். அவர்களை மும்மை போலீஸார் கைது செய்து வைத்துள்ளதாக எங்கள் குடும்பத்திற்கு எனது கணவர் தொலைபேசி மூலம் தெரிவித்தார். மேலும் குவைத் நாட்டில் எனது கணவரை கொத்தடிமையாக நடத்தி அடித்து துன்புறுத்தியதால் உடலில் உள்ள காயங்களுடன் கூடிய புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார். எனவே எனது கணவரும், மற்ற 2 மீனவர்களும் உயிர் தப்பிக்க வேண்டிய மீன்பிடி படகில் இந்தியா வந்துள்ளனர். எனவே மும்பை போலீஸில் இருந்து எனது கணவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News