திருப்பத்தூரில் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு அளிப்பு
திருப்பத்தூரில் வழக்கறிஞர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மார்த்தாண்டன் மனைவி புவனா அவருடைய உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
மார்த்தாண்டனின் தந்தை ஆன கருப்பனை சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பலமனேரி போலீசார் இரண்டு கிலோ வெள்ளி வாங்கிய வழக்கில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
மார்த்தாண்டனின் உறவுக்கார பையனான சக்திவேல் இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் எனவே தனது தந்தையை அழைத்து வர வழக்கறிஞராக நியமித்து உள்ளார்.
இதன் காரணமாக சக்திவேல் ஒரு வெள்ளை தாளில் கருப்பனிடம் கையெழுத்து வாங்கி உள்ளார். மேலும் வழக்குக்காக ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் மூலம் ரூபாய் 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயையும் 7 லட்சத்தை கையில் வாங்கியுள்ளார்.
மேலும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் வெள்ளை தாளில் கருப்பன் கையெழுத்து போட்டதை வைத்து போலீசாரை தூண்டி உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்குவேன் என கூறி மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது.
பணம் கொடுக்காத காரணத்தினால் ஆத்திரத்தில் சக்திவேல் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் மார்த்தாண்டனின் மனைவி கடந்த மாதம் 25ஆம் தேதி காவேரிப்பட்டணம் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டையில் உள்ள தனது அம்மாவிற்குக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஊருக்கு வர நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதனை அறிந்துகொண்ட சக்திவேல் தனது காரில் புவனாவை அழைத்துக் கொண்டு உனது அம்மா வீட்டில் வீடுகிறேன் வா என கூறி திருப்பத்தூர் மாவட்டம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள சக்திவேலின் வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் வைத்து பூட்டி உள்ளார். அதன் பின்னர் புவனா செல்போனில் தனது உறவுக்காரர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் போட்டதன் காரணமாக சக்திவேலு வீட்டிற்கு சென்று புவனாவை உறவுக்காரர்கள் மீட்டு வந்தனர்.
இதன் காரணமாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பவம் நடந்த இடம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடம் என்பதால் நாட்றம்பள்ளி போலீசார் கடந்த 31ஆம் தேதி வழக்கறிஞர் சக்திவேல் மற்றும் அவருடைய தம்பியான ராஜவேல் ஆகிய இருவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இவர் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட புவனா மற்றும் அவருடைய உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.