பழனியில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
பழனியில் ஆக்கிரமிப்புப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-04 10:08 GMT
திண்டுக்கல் மாவட்டம், பழனி கிரி வீதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கிரி வீதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன.
இதேபோல, ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளையும் அப்புறப்படுத்துவதற்கான பணிகளை பழனி திருக்கோயில் தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பழனி மேற்கு கிரி வீதியிலுள்ள அண்ணாசெட்டி மடம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் தங்கள் குழந்தைகளுடன் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.