சமுதாய௯டம்,சாக்கடை வசதிக்கு நிதி ஒதுக்கக்கோரி நகரமன்ற தலைவர் ஆட்சியரிடம் மனு
ஆத்தூர் அடுத்து நரசிங்கபுரம் நகராட்சி வார்டு பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக சாக்கடை வசதி சமுதாயக்கூடம் அமைப்பதற்கு நிதி வழங்க சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அவர்களிடம் நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் கோரிக்கை மனு வழங்கினார்.;
Update: 2024-02-21 11:53 GMT
நகரமன்ற தலைவர் ஆட்சியரிடம் மனு
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடையே அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் சமுதாயக்கூடம், சாக்கடை வசதி உள்ளிட்ட பணிகளுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலமாக நிதி வழங்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அவர்களிடம் நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் மனு வழங்கினார்கள்.