தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு;
Update: 2024-02-20 05:54 GMT
கோரிக்கை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நல சங்கத்தின் சார்பில் பிப்ரவரி 19ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், வாகனங்களை பெயர் மாற்றம் செய்யும் பொழுதும் வாகன கடன்கள் பெயர் மாற்றம் செய்யவோ அல்லது கடனை முழுமையாக கட்டி நீக்குவதற்கோ அலுவலகத்தில் முறையான கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை கொடுக்கும் போது வாகனத்தினுடைய பதிவு புத்தகத்தில் உள்ள பழைய உரிமையாளர் முகவரிக்கு அல்லது அவருடைய ஆதார் எண் மற்றும் அவருடைய மொபைல் எண்னுக்கு otp வருவதும் தங்களுக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்துவதாகவும் இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும், அதேபோல் வாகன தகுதி சான்று மற்றும் பெயர் மாற்றம் செய்யும்போது பெயர் மாற்றம் செய்யக்கூடிய உயிரிலேயே தகுதிச் சான்று காண்பிக்கும் பழைய நடைமுறையை ஏற்படுத்தி கொடுக்கு வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், தமிழக அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கும் நிகழ்ச்சி சங்கத்தின் சார்பில் நடைபெறும் நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மன அளித்திருப்பாக தெரிவித்தனர். இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் சீனிவாசன் மாவட்ட பொருளாளர் குருமூர்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்