பட்டாவை மாற்றித்தரக்கோரி கிராம மக்கள் மனு...
கிராம மக்களின் இடத்தை மீட்டு பட்டாவை மாற்றித் தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-02 05:38 GMT
மனு
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்குடியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 80 ஏக்கர் நிலத்தை கிராம பொதுநலனுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக பெற்று அதனை தனி நபருக்கு பட்டா மாற்றி பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், பட்டாவை பெற்ற தனி நபரின் வாரிசுகள் தற்போது அந்த 80 ஏக்கர் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயன்று வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்தி, மீண்டும் எங்களது கிராம பொது பயன்பாட்டிற்கே அந்த நிலத்தை பட்டா மாற்றி தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து அதற்கான புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போட்டுள்ளனர்.