பெட்ரோல் குண்டு வீச்சு - வாலிபர் கைது
தூத்துக்குடியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு விசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-01-24 11:54 GMT
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் பழனி குமார் மகன் சஞ்சய் (18), போல்டன் புரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் மகன் ஜோஸ்வா டேனியல் (19). இவர்கள் இருவரும் நண்பர்கள், 2பேரும் தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், நண்பர்கள் இடையே பண விவாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது ஆத்திரம் அடைந்த ஜோஸ்வா டேனியல் நேற்று இரவு சங்கரா புரத்தில் உள்ள சஞ்சய் வீட்டின் முன்பு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை தீவைத்து வீசினாராம். இதில் பாட்டில் வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து சஞ்சயின் தந்தை பழனிகுமார் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜோஸ்வா டேனியலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.