கட்டிடத் தொழிலாளி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

மதுரை அருகே கட்டிடத் தொழிலாளி மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2024-05-16 01:18 GMT

மதுரை அருகே கட்டிடத் தொழிலாளி மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


மதுரை அருகே கட்டிடத் தொழிலாளி மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் - 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது - ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை செய்து சிறையில் அடைப்பு. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் சரக எல்லைக்குட்பட்ட தென்பழஞ்சி கிராமத்தில் முன் விரோதம் காரணமாக வீட்டின் முன் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த கட்டுமான தொழிலாளி மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் 3 சிறார்கள் உட்பட நான்கு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட தப்பி ஓடிய மூன்று நபர்களை தேடி வந்த நிலையில் தற்போது ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் மூன்று சிறார்கள் உட்பட சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் சரக எல்லைக்குட்பட்ட தென்பழஞ்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துமுருகன் (27) இவர் கட்டிட தொழிலாளி ஆவார்.

திருமணம் ஆகி இரண்டு மகள் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு தனது வீட்டின் முன்பக்கத்தில் படுத்து உறங்கி உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே கடந்த 1 வருடத்திற்கு முன்பு முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று கண்ணன் மதுரை மாநகர் திடீர் நகரை சேர்ந்த மூன்று சிறார் நண்பர்களுடன் ஒன்றாக மது அருந்திய நிலையில்., போதையில் சிறார்களுடன் சேர்ந்த 3 நேற்று இரவு முத்துமுருகன் வீட்டிற்கு சென்று அவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். தொடர்ந்து., முத்து முருகன் அலாரம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் ஓடி வந்து தீயை அணைத்ததை தொடர்ந்து சம்பவம் குறித்து ஆசிரம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆஸ்தும்பட்டி போலீசார் நேற்று நள்ளிரவே பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட கண்ணனை கைது செய்த நிலையில் மேலும் மூவரை தீவிரமாக தேடி வந்தனர் இந்த நிலையில் இன்று மதியம் மூவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரிக்கினை செய்த போது மூவரும் திடீர் நகர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறார்கள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய மூன்று சிறார் உட்பட நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தற்போது சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News