பெட்ரோல் டீசல் சில்லறை விற்பனை நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில் பெட்ரோல் டீசல் சில்லறை விற்பனை நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-04 01:07 GMT

விருதுநகரில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில் பெட்ரோல் டீசல் சில்லறை விற்பனை நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம் - 108 ஆம்புலன்ஸ் அரசு வாகனத்திற்கும் பெட்ரோல் நிரப்ப மறுப்பு - தங்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளத்தொகையை தரும் வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்த ஊழியர்கள் விருதுநகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் விருதுநகர் மண்டலம் சார்பில் பெட்ரோல் டீசல் சில்லறை விற்பனை நிலையம் துவங்கப்பட்டது.

இந்த பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் மதுரையைச் சார்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபால் என்பவர் எடுத்து நடத்தி வருவதாகவும் இந்த பெட்ரோல் பங்கில் இரண்டு சூப்பர்வைசர்கள் மற்றும் 9 பம்ப் ஆப்ரேட்டர்கள் என மொத்தம் 12 பேர் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது இவர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை முறையாக ஒப்பந்தம் எடுத்தவர் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கும் பொழுது இது சம்மந்தமாக ஒப்பந்தம் எடுத்த கோபால் என்பவரிடம் கேட்டதற்கு வேண்டுமென்றால் வேலை செய்யுங்கள் இல்லையென்றால் வேலையை விட்டு செல்லுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தம் எடுத்த கோபால் என்பவர் அரசு பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு 11,512 ரூபாய் சம்பளமாக நிர்ணயித்துள்ள நிலையில் 8,400 மட்டுமே ஊதியமாக அவர் வழங்கி வருவதாகவும் வேலை செய்யும் பணியாளர்களுக்கு பி எஃப் எஸ் ஐ செலுத்துவதில் ஊழியர்களிடமிருந்தே சம்பளத்தை முழுமையாக பிடித்து அதை செலுத்தி வருவதாகவும் மேலும் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரிடமிருந்தும் மாதம் ஆயிரம் ரூபாய் கமிஷனாக எடுத்து மோசடியில் ஈடுபடுவதாகவும் அதேபோல் சூப்பர்வைசருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட 3000 ரூபாய் குறைவாக வழங்குவதாகவும் குற்றம் சாட்டினர் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று பெட்ரோல் போடுவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பெட்ரோல் பங்கிற்கு வரும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் வாகனங்களுக்கும் பெட்ரோல் நிரப்ப மறுத்து வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாவட்ட நிர்வாகமும் ,தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து ஒப்பந்தம் எடுத்த நபரிடமிருந்து முறையாக ஊதியத்தைப் பெற்றுத் தர வேண்டும் என பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர் பேட்டி: சதிஷ்குமார் - ஊழியர்

Tags:    

Similar News