முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் மாநில துணைத்தலைவர் கலைவாணன் தலைமை வைத்தார்.மாவட்டத் தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாக்யராஜ்,மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் வாழ்த்துரை வழங்கினார்.
வலியுறுத்திய கோரிக்கைகளாக, CPS ரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் நடைமுறைப்படுத்துதல் வேண்டும். 2009 க்கு பின்பு பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பேரிழப்பான ஊதிய முரண்பாட்டை சரி செய்திட வேண்டும். புதிய ஊதிய குழுவில் முதுகலை ஆசிரியருக்கு ஊதிய விகிதத்தில் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்திவிட்டு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திடுவதை ஆண்டுதோறும் உறுதி செய்திட வேண்டும்.
கலந்தாய்வு விதிமுறைகளில் உபரி பணியிடத்தில் சென்றவர்களுக்கு முன்னுரிமையும் மாவட்ட கலந்தாய்வு offline வழியாக நடத்திடவும் வெளிமாவட்ட கலந்தாய்வில் உள்மாவட்ட காலிப் பணியிடங்கள் காட்டிடவும் மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்திய கலந்தாய்வு சார்ந்த சாதகமான விதிமுறைகளை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசின் பிற துறை அலுவலர்களின் விட கூடுதலாக கல்வி தகுதி பெற்றும் ஒப்புமை நோக்கில் குறைந்த ஊதியம் மற்றும் 20 ஆண்டுகளாக பதிவு உயர்வு இல்லாத பணி தொகுப்புக்களை இருக்கும் முதுநிலை ஆசிரியர்களின் குறைகனை நீக்க ஒரு குழு அமைத்து முதுகலை ஆசிரியர்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளீட்டு கோரிக்களை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.