கடலூரில் இரண்டாம் கட்ட பகுப்பாய்வு தொகுதி ஒதுக்கீட்டு பணி
கடலூரில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பகுப்பாய்வு தொகுதி ஒதுக்கீட்டு பணி மேற்கொள்ளப்பட்டது.;
Update: 2024-04-01 06:01 GMT
கடலூரில் இரண்டாம் கட்ட பகுப்பாய்வு தொகுதி ஒதுக்கீட்டு பணி
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் முன்னிலையில் கடலூர் பாராளுமன்ற பொது தேர்தலுக்கான பொது பார்வையாளர் டாரப் இம்சென் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கணினி அறையில் தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பகுப்பாய்வு தொகுதி ஒதுக்கீட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளனர்.