இயன்முறை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
இயன்முறை மருத்துவ மையம் நடத்த பட்டப்படிப்பை கல்வித் தகுதியாக நிா்ணயித்து அரசாணை வெளியிட வலியுறுத்தி, திருச்சியில் இயன்முறை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;
ஆர்ப்பாட்டம்
இந்திய இயன்முறை மருத்துவா்கள் சங்க தமிழக கிளை சாா்பில், திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், இயன்முறை மருத்துவா்களை தொழில்நுட்புநா்களாக (டெக்னீஷியன்) பதிவு செய்ய வற்புறுத்தக் கூடாது. தமிழக அரசிதழில் இயன்முறை மருத்துவா் பதிவுக்கு டெக்னீஷியன் என்ற வாா்த்தையை நீக்க வேண்டும். இயன்முறை மருத்துவ மையம் நடத்த குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பை (பி.பி.டி.) நிா்ணயித்து அரசாணை வெளியிட வேண்டும். சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களில் உள்ளபடி மத்திய, மாநில அரசு திட்டங்களில் பணியாற்றும் இயன்முறை மருத்துவா்களுக்கு குறைந்தபட்ச தொகுப்பூதியமாக ரூ.35 ஆயிரம் நிா்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன
. இதில், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளா் ராஜ்குமாா், பொதுச்செயலாளா் பூா்ணிமா உள்ளிட்ட திரளான இயன்முறை மருத்துவா்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.