குமரி : காரில் லாரி மோதியதால் மறியல் - வாகனங்கள் சிறை பிடிப்பு. 

காலை மாலை பள்ளி நேரங்களில் கனரக லாரிகள் இயக்குவதில்லை என்ற உறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Update: 2023-12-16 09:04 GMT
மறியல் போராட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம்  குலசேகரம் அருகே வெண்டலிக்கோடு என்ற இடத்தை சேர்ந்த ரவி (48)என்பவர் தனது 2 பிள்ளைகளை திருவட்டாரில்  உள்ள ஒரு பள்ளிக்கு கொண்டு செல்ல காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குலசேகரம் புலியிறங்கிப் பகுதி அருகே சென்ற போது, முன்னால் சென்ற டாரஸ் லாரி ரவி ஓட்டிய காரின் முன் பக்கத்தில் மோதி,. மோதிய வேகத்தில் அந்த கார் லாரிக்குள் சிக்கி, சுமார் 100 அடி தூரம் வரை காரை லாரி இழுத்து சென்றுள்ளது. ஆனால் காருக்குள் இருந்த இரண்டு மாணவர்களும், ரவியும் காயமின்றி தப்பியுள்ளனர். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக லாரிக்குள் சிக்கியிருந்த காரை மீட்டு இரண்டு குழந்தைகளையும் ரவியையும் மீட்டனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாரஸ் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்த தொடங்கினர். இப்படியாக சுமார் அரை மணி நேரத்தில் 25க்கு மேற்பட்ட லாரிகள் சிறை பிடிக்கப்பட்டது. தக்கலை டிஎஸ்பி உதயசூரியன், தாசில்தார்  புரந்தரதாஸ் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் அந்த வழியாக வந்த 15 அரசு பஸ்களும் சிறைபிடிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், காலை மாலை பள்ளி நேரங்களில் கனரக லாரிகள் இயக்குவதில்லை என்ற உறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News