சீவலப்பேரி அருகே மறியல் முயற்சி - போலீசார் பேச்சு வார்த்தை
குடிநீர், ரேஷன் பொருட்களை வழங்கக்கோரி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.;
Update: 2023-12-22 08:50 GMT
மறியல் முயற்சி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி சீவலப்பேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொட்டல்நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் அவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும், வெள்ளத்தினால் குடிக்க குடிநீர் இல்லாமல் தவித்து வருவதால் குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலுக்கு முயற்சி செய்தனர். அவர்களிடம் சீவலப்பேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.