தம்மம்பட்டி காவல் நிலையம் முன்பு மறியல்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேர்வு செய்த இடத்தை வழங்க கோரி தம்மம்பட்டி காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-24 10:09 GMT
 பைல் படம்

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேர்வு செய்த இடத்தை வழங்க கோரி தம்மம்பட்டி காவல் நிலையம் முன்பு நாகியம்பட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் வருடந்தோறும் தைப்பூச தினத்தில், ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

இப்போட்டி ஊர் பொது இடத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அப்பகுதியில் ஓர் இடத்தை பொதுமக்கள் தேர்வு செய்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால் பழனிமுத்து என்பவர் அந்த நிலம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி நிலத்தை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பழனிமுத்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தம்மம்பட்டி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலிஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் மறியலைபொதுமக்கள் கைவிட்டனர்.

Tags:    

Similar News