தை அமாவாசை முன்னிட்டு போரில் இறந்த பாரத வீரர்கள் ஆத்மா சாந்தி அடைய பித்ரு தர்ப்பண பூஜை
திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள மயில் ஆசிரமத்தில் பித்ரு தர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது.
Update: 2024-02-09 08:15 GMT
உத்தராயன புண்ணிய கால துவக்கமான தை மாத அமாவாசை தினத்தில் மூதாதையர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.திருச்செங்கோடு கிரிவலப் பாதையில் தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் 36 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பித்ரு தர்ப்பணம் பூஜை செய்தனர். எருக்கன் இலை எள் மஞ்சள் குங்குமம் சந்தனம் அரிசி பருப்பு வெல்லம் ஆகிய பொருட்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.
மேற்படி பூஜையில் போரில் இறந்த பாரத ராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தி அடையவும் , அயோத்தி ராமர் கோவில் போராட்டத்தில் பலியான துறவிகளுக்கு தர்ப்பணம் செய்யப்பட்டது. உலகம் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் திகழ கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.