திற்பரப்பு அருவியில் குவிந்த சிவாலய பக்தர்கள்

சிவாலய ஓட்டம் நடைபெறுவதையொட்டி மகாதேவர் ஆலயத்தில் தரிசனம் செய்த பக்தர்கள் திற்பரப்பு அருகில் நீராடி சென்றனர்.

Update: 2024-03-08 12:39 GMT

திற்பரப்பு அருவி 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறும்.இந்த ஆண்டுக்கான சிவாலய ஓட்டம் நேற்று துவங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக சிவாலய ஓட்டம் நடைபெற்றது.மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் சிவ பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து காவி உடை அணிந்து கையில் விசிறி உடன் கோவிந்தா கோபாலா என்ற கோஷம் முழங்க நடை பயணமாகவும் ஓடியும் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இன்றும் இரண்டாவது நாளாக இந்த சிவாலய ஓட்டம் நடைபெற்றது.திற்பரப்பு மகாதேவர் ஆலயத்தில் சிவாலய ஓட்டம் மேற்கொண்ட பக்தர்கள் மகா தேவரை தரிசிப்பதற்கு முன் அருவியில் குளித்து நீராடிய பின்னர் மகாதேவர் வழிபட்டு சென்றனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் திற்பரப்பு அருவியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.அருவியில் வெள்ளம் குறைவாக இருந்ததால் பக்தர்களுக்கு குளிப்பதற்கு சிரமமாகவும் இருந்தது.

Tags:    

Similar News