காட்டூரில் ரூ.10- லட்சம் மதிப்பில் பைப்லைன் விஸ்தரிப்பு பணி

காட்டூரில் ரூ.10- லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிப்பு பணி. எம்எல்ஏ இளங்கோ துவக்கி வைத்தார்.

Update: 2023-12-21 11:50 GMT
காட்டூரில் ரூ.10- லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிப்பு பணி. எம்எல்ஏ இளங்கோ துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள, அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட காட்டூரில் ரூபாய் 10- லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று, அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் அரவக்குறிச்சி எம் எல் ஏ இளங்கோ. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூர் கழக நகர செயலாளர் பிஎஸ் மணி, அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News