பிடாரியம்மன், மன்மதன், பன்றிக்குத்தி ஐயனார் கோயில் மகா கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மேல இலுப்பூர் பிடாரியம்மன், மன்மதன், பன்றிக்குத்தி ஐயனார் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

Update: 2024-06-03 02:09 GMT

கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மேல இலுப்பூர் பிடாரியம்மன், மன்மதன், பன்றிக்குத்திஐயனார் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிடாரியம்மன் கோயிலை புதுப்பித்தும், பன்றிக்குத்தி ஐயனார், மன்மதன் கோயில்கள் புதிதாக கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜை, மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

இரவு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று முந்தினம் காலை விநாயகர் வழிபாடுடன் இரண்டாம் கால யாக பூஜையும், இரவு முன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பனறிக்குத்தி ஐயனார், மன்மதன், பிடாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மகா அபிஷேகமும், இரவு சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மே இலுப்பூர் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News