கலைஞர் நூற்றாண்டு நினைவாக 1000 மரக்கன்றுகள் நடவு - அமைச்சர் பங்கேற்பு
ஆலங்குடி அருகே கலைஞர் நூற்றாண்டு நினைவாக 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டார்.;
Update: 2024-06-20 05:50 GMT
மரக்கன்றுகள் நடவு
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் பூவற்றக்குடி ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நட்டு கலைஞர் நூற்றாண்டு நினைவு குறுங்காடு அமைக்கும் பணியை ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்ய நாதன் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.