பாத்திமா பள்ளிவாசலில் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி
பாத்திமா பள்ளிவாசலில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-17 09:24 GMT
மரக்கன்று நடும் பணி
நம்ம திருச்செங்கோடு கட்டளை சார்பில் பட்டறை மேடு பகுதியில் உள்ள ஃபாத்திமா பள்ளிவாசல் வளாகத்தில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தலைவர் பரந்தாமன் தலைமையில் பாத்திமா பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் வேம்பு, புங்கள், அத்தி, நாவல், நீர்மருது, மகாகனி, இயல்வாகை என 40 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.