வால்பாறை பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வால்பாறையில் முறையாக சம்பளம் வழங்காத தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை கண்டித்து பணியை புறக்கணித்து 1000க்கும் மேற்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-04-27 11:52 GMT
போராட்டம்

பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில் முறையாக சம்பளம் வழங்காத தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை கண்டித்து பணியை புறக்கணித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்.. பொள்ளாச்சி.. ஏப்ரல்..27 

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை அருகே உள்ள கருமலைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது,. இந்த தேயிலை தோட்டத்தில் கருமலை, அக்காமலை, ஊசிமலை ஆகிய பகுதியில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தோட்ட தொழிலாளராக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தோட்ட நிர்வாகம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதம் ஏழாம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே 15ஆம் தேதி மற்றும் 20. தேதி அன்று சம்பளம் வழங்குவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் மற்றும், வார விடுமுறை, மருத்துவ வசதி ஆகியவற்றை முறையாக வழங்குவதில்லை எனக்கூறி இன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் முறையான சம்பளம், தோட்டத் தொழிலாளருக்கான சலுகைகள் வழங்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் இதனால் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News