மு.க.ஸ்டாலின் கோல்ப் கிளப்பில் உள்ள மைதானத்தில் கோல்ப் விளையாடினார்
கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோல்ப் கிளப்பில் உள்ள மைதானத்தில் கோல்ப் விளையாடினார்.
Update: 2024-05-01 03:15 GMT
நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து பல்வேறு கட்சி நிர்வாகிகள் குளிர் பிரதேசங்களுக்கு சென்று வருகின்றனர், இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்விற்காக 5 நாட்கள் பயணமாக தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரை வந்தடைந்து அங்கு இருந்து வத்தலக்குண்டு மலைச்சாலையில் வாகனம் மூலம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு நேற்று வந்தடைந்த நிலையில் இன்று மாலை வேளையில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கால்ப் மைதானத்திற்கு சென்று அங்குள்ள பசுமை புல்வெளி பகுதிகளில் நடந்து சென்றதுடன் கால்ப் விளையாடினார், மேலும் நாளை சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்க செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது,இதனால் இப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.