இந்திய அணிக்கான தகுதிப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற வீராங்கனைகள்!

மாஸ்கோவில் நடக்கவுள்ள சர்வதேச மகளிர் வூஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான தேர்வு கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

Update: 2024-01-22 12:05 GMT

மாஸ்கோவில் நடக்கவுள்ள சர்வதேச மகளிர் வூஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான தேர்வு கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் நடந்தது.  

கோவை:ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச மகளிர் வூஷூ சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான தேர்வு கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கேலோ இந்தியா ஆதிக்கம் செலுத்திய வீராங்கனைகள் மற்றும் தேசிய அளவில் சாதித்த வீராங்கனைகள் உட்பட நாடு முழுவதும் இருந்து 130 பேர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதுகுறித்து வூஷூ அமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சபீர் செய்தியாளர்களிடம் பேசும்போது ரஷ்யாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான வூஷூ சாம்பியன்ஷிப் போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாகவும் இந்தியாவிலிருந்து 40 தகுதி வாய்ந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மாஸ்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான தகுதி போட்டிகளில் தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 130 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் எனவும் கடந்த முறை நடைபெற்ற வூஷூ சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள் கிடைத்த நிலையில் இந்த முறை கூடுதல் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்றார்.கேலோ இந்தியா போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளுக்கான தகுதி போட்டிகளில் அதிக அளவில் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News