கோவிலில் உழவாரப்பணிகள்
தோரணமலை முருகன் கோவிலில் உழவாரப்பணிகள் நடைபெற்றன.
Update: 2024-07-01 09:18 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பிரசித்தி பெற்ற தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருச்செந்தூர் பாரத உழவர் பணி குழுவை சேர்ந்த 46 பேர் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். இதில் 1002 படிகளை சுத்தம் செய்து, பூஜை பொருட்கள், விளக்குகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து கோவிலை சுற்றியுள்ள செடி கொடிகளை அகற்றினர். இந்த ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.