பிளஸ் 1 தேர்வு : சேலம் மாவட்டத்தில் 69 பள்ளிகள் 100% தேர்ச்சி
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொது தேர்வில் 8 அரசுப்பள்ளிகள், 2 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட 69 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன.
Update: 2024-05-15 05:05 GMT
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் சேலம் மாவட்டத்தில் 8 அரசுப்பள்ளிகள், 2 அரசு உதவிபெறும் பள்ளிகள், 57 தனியார், 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என மொத்தம் 69 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதே சமயம் கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வில் 81 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ப்ளஸ்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.