சாலை விபத்தில் பிளஸ் டூ மாணவர் படுகாயம்

மல்லசமுத்திரம் அருகே நடந்த சாலை விபத்தில் பிளஸ் டூ மாணவர் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2023-12-11 16:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மல்லசமுத்திரம் அருகே, நல்லாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம்48 மகன் நந்தகுமார்26. இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, வைகுந்தத்தில் இருந்து அவரது ஊருக்கு செல்வதற்காக அவரது டி.வி.எஸ்., ஸ்போட்ஸ் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அச்சமயம், ஆட்டையாம்பட்டி சிவதாபுரத்தை சேர்ந்த பிளஸ்டூ மாணவர்கள் தரணீதரன்17 மற்றும் அவரது நண்பர் சங்ககிரியை சேர்ந்த கெளதம்16 ஆகியோர் அவர்களது டி.வி.எஸ்., ஸ்போட்ஸ் இருசக்கர வாகனத்தில் வைகுந்தம் நோக்கி சென்றுள்ளனர்.

காளிப்பட்டி அருகேயுள்ள அம்மாபட்டி பிரிவுசாலையின் அருகில் செல்லும்போது, எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. மேலும், தரணிதரனின் வாகனத்திற்கு பின்னால் வந்த காளிப்பட்டியை சேர்ந்த சுத்ரராஜன்63, அவரது மனைவி சுசீலா55 தம்பதியினர் ஓட்டி வந்த எக்ஸல்100 இருசக்கர வாகனமும் ஒன்றோடொன்று மோதியது. இதில், பிளஸ்டூ மாணவர் தரணிதரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

நந்தகுமார் மற்றும் சுசீலாவிற்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு, சேலத்தில் இருக்கும் வெவ்வேறு தனியார் மருந்துவமனைகளில் சகிச்சை பெற்று வருகின்றனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News