ரயில் நிலைய விரிவாக்கப் பணி: பிரதமர் அடிக்கல்

சின்னசேலம் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Update: 2024-02-27 05:20 GMT

சின்னசேலம் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.  

சின்னசேலம் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு பாரத பிரத மர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அம்ரூத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 34 ரயில் நிலையங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகளை பிரதமர் மோடி  இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ் தென்னக ரயில்வே சேலம் கோட்டத்திற்குட்பட்ட சின்னசேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறை, மேம்படுத்தப்பட்ட ரயில் நிலைய முகப்பு, வணிக நிறுவனங்கள், தானியங்கி படிக்கட்டுகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

சின்னசேலத்தில் நடந்த நிகழ்ச்சியில், தென்னக ரயில்வே சேலம் கோட்ட பொறியாளர் பிரவீன்குமார், வணிக ஆய்வாளர் சரவணன், சின்ன சேலம் ரயில் நிலைய அதிகாரி ராகேஷ், கள்ளக்குறிச்சி ரமேஷ் டி.எஸ்.பி., மற்றும் மாவட்ட தலைவர் அருண், மணிவண்ணன் உள்ளிட்ட பா.ஜ.,வினர், லயன்ஸ், ரோட்டரி, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள், அனைத்து வணிகர் சங்கத்தினர், கைலாஷ் கல்லுாரி மாணவிகள், சக்தி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News