பெண்களுக்கான உரிமையை தர மறுத்த பிரதமர் மோடி
பெண்களுக்கான உரிமையை தர மறுத்த பிரதமர் மோடி என காங்., அகில இந்திய மகளிர் தலைவி அல்கா லம்பா பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்தார். அவர் நாகர்கோவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
பாரத பிரதமர் நரேந்திர மோடி வட மாநிலங்களை ஏமாற்றிவிட்டு தென் மாநிலங்களில் தெருத்தெருவாக வாக்கு சேகரித்து வருகிறார். பாரதிய ஜனதா வட மாநிலத்தின் மிகப்பெரிய வெற்றி கிடைக்காது என்பதால் தென் மாநிலத்தில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடியின் பகல் கனவு பலிக்காது. பிரதமர் மக்களை சந்திக்கும்போது விவசாயிகள் தற்கொலை, கடன் தள்ளுபடி குறித்து கேள்வி கேட்க வேண்டும் .இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். பல கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக கூறிவிட்டு பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார்.
பாரதிய ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பிரதமர் மோடி பெண்களுக்கு 33 சதவீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறியிருந்தார். .ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருந்தால் 180 பெண்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பார்கள் .ஆனால் பெண்களுக்கான உரிமையை தர மோடி மறுத்து விட்டார். ஆனால் 2024 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்ததும் 33 சதவீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும் . இவ்வாறு அவர் கூறினார் .பேட்டியின் போது விஜய் வசந்த் எம் பி உடன் இருந்தார்.