தர்மபுரியில் பாமக வேட்பாளர் முன்னிலை

தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் மணி இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் அசோகன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Update: 2024-06-04 04:42 GMT

  தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் மணி இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் அசோகன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

தமிழகத்தில் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது அதனை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று ஜூன் 4 நடைபெற்று வருகிறது.தற்போது 9.45 நிலவரப்படி நடைபெற்று வரும் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 5,407 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும் திமுக வேட்பாளர் 2, 180 வாழ்த்துக்கள் பெற்ற இரண்டாம் இடத்திலும் அதிமுக வேட்பாளர் 1917 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News