மேட்டூரில் சார் ஆட்சியரை சந்தித்த பா.ம.க, எம்எல்ஏ
Update: 2023-12-21 01:10 GMT
சேலம் மாவட்டம்,மேட்டூரில் புதிய சார் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட பொன்மணிக்கு எம்.எல்.ஏ, எஸ்.சதாசிவம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது சதாசிவம் எம்.எல்.ஏ, கூறுகையில் மேட்டூரில் பல இடங்களில் சட்டவிரோதமாக சந்து கடைகளில் ,கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது .மேலும் தொகுதி முழுவதும் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை நடக்கிறது. அரசுக்கு எதிரான இது போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேட்டூர் அணை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் ,தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரைக்காடு பகுதியில் தமிழக அரசு வனத்துறை சோதனை சாவடி அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.