திருமணவிழாவில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற பாமக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் சமூக நீதிப் பிறப்பிடம் என வசனம் பேசும் திமுகவிற்கும் சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!10.5 விழுக்காடு கொடுப்போம் என ஏமாற்றி வருகிறார்கள் எந்த மேடையில் வேண்டுமானாலும் விவாதம் பண்ண நான் தயார் எவர் வேண்டுமானாலும் வரட்டும் பாமக தலைவர் அன்புமணி சாவல் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வன்னியர் சங்க மாநில தலைவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன டிகே.ராஜா அவர்களின் மகன் ஞானகுரு. இந்துமதி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி திருமணம் நடத்தி வைத்தார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி மாநில கவுரவ தலைவர் ஜிகே மணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திருப்பத்தூரில் அமைந்துள்ள ஹோட்டல் ஹீல்ஸ் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழக மக்கள் தேர்வெழுத்து திமுக கூட்டணிக்கு வெற்றியை கொடுத்தார்கள் மக்களுடைய முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் அதே வேலையில் மக்கள் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் இந்த தேர்தலை பொருத்தவரை தமிழக மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களித்தார் வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வில்லை காமராஜர் மற்றும் அண்ணா காலத்தில் வேட்பாளர்களை நல்ல நேர்மையான வேட்பாளர்களை குறைக்கின்ற வேட்பாளர்களை நிறுத்தினார்கள் அதன் காரணமாக அந்த நம்பிக்கையில் அப்போதைய மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களித்தார்கள்.
பின்னர் வந்த வேட்பாளர்கள் நம்பிக்கை இல்லை நேர்மையானவர்கள் இல்லை என பேசினார் திமுக அரசு சாதனைகள் என்று சொன்னால் மூன்று ஆண்டுகளில் எதுவும் இல்லை அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பத்து சதவீதம் மட்டுமே செய்துள்ளனர் 90% செய்யவில்லை சமூக நீதிச் சார்ந்த வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள் மின்கட்டணத்தை மாதம் ஒருமுறை கணப்பெடுப்பேன் என்று கூறினார்கள் இதுவரை எதுவும் நடக்கவில்லை இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை மின்சார கட்டணம் ஏரி உள்ளது அப்படி கட்டணத்தை ஏற்றியும் மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது என கூறி வருகின்றனர்.
இதற்கு நிர்வாக திறமை இல்லாததும் ஊழலே காரணம் திமுகவின் நாங்க தந்தை பெரியார் வாரிசு சமூக நீதி எங்கள் மூச்சு என்று வசனம் எல்லாம் பேசிக்கொண்டு இருக்கீங்க ஆனா உண்மையாக சமூக நீதிப் பேசியவர்கள் என்றால் அடுத்த ஒரு வாரத்தில் கணக்கெடுப்பு எடுத்து சொல்லுவீங்க சமூக நீதி நிலைநாட்டுவோம் என்று கூறுகின்ற திமுகவிற்கும் சமூகநீதிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை ஏமாத்து வேலை செய்து வருகிறார்கள் அதே போல் 10.5 தருவோம் என்று கூறி ஏமாற்றி வருகின்றனர் எந்த மேடையில் வேண்டுமானாலும் விவாதம் பண்ண நான் தயார் யார் வேண்டுமானாலும் வரட்டும் பேச்சு அளவில்தான் திமுகவினர் பேசி வருகின்றனர் என்ன சவால் விடுத்தார்.
காவல்துறைக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை நடைபெறுவதில்லை மாணவர்கள் எல்லாம் பாதிக்கு அடிமையாகி வருகின்றனர் ஆன்லைன் கேம்லிங்கை தடை செய்தும் அதையும் விட்டு விட்டார்கள் மேலும் காவிரியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறோம் ஆனால் நடவடிக்கைகளை மணல் கொள்ளையடிக்க தடுப்பணையை கட்ட மறுக்கிறார்கள் ஆனால் தற்போது சாதனையாக 17 மணல் குவாரிகளை தொடங்கி இருக்கிறார்கள். திமுகவின் குறுக்கிய தொலைநோக்கு திட்டம் அடுத்த தேர்தலை நோக்கி இருக்கும் ஆனால் பாமகவின் தொலைநோக்கு திட்டம் அடுத்த தலைமுறையை சார்ந்திருக்கும் எனக் கூறினார்.