விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
கயத்தாறு அருகே விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளம் கீழத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் இசக்கிமுத்து (23).
ஆட்டோ டிரைவரான இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததுடன், வயிற்றுவலியால அவதிப்பட்டாராம். நேற்று முன்தினம் அவா் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பருத்திக் காட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். இதையடுத்து அவரது பெற்றோா் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.