விஷ வண்டுகள் அச்சுறுத்தல்: எப்சிஐ குடோனில் ஆய்வு செய்ய அதிமுக கோரிக்கை!
தூத்துக்குடியில் எப்.சி.ஐ., குடோன் பகுதியில் இருந்து பரவி வரும் விஷவண்டுகளை ஒழிக்க அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்ய வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-07-09 05:34 GMT
தூத்துக்குடியில் எப்.சி.ஐ., குடோன் பகுதியில் இருந்து பரவி வரும் விஷவண்டுகளை ஒழிக்க அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்ய வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி பாளை ரோட்டில் அமைந்துள்ள இந்திய உணவு கழகத்திற்கு சொந்தமான (F.C.I) குடோனில் சமீப காலமாக உற்பத்தியாகும் ஒரு வித விஷவண்டுகள் அருகில் அமைந்துள்ள மக்கள் அதிகம் வசிக்கும் தபால் தந்தி காலனி, பசும்பொன்நகர், ஆசிர்வாதநகர், முத்துநகர், இந்திராநகர், திரு.வி.க நகர் பகுதிகளில் பரவி உணவுப் பொருட்களிலும், பெரியவர்கள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை அனைவரையும் கடித்து ஒருவித ஊரல் நோய் ஏற்பட்டு மக்கள் தூக்கம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மேலும் உணவு பொருட்களில் விழுவதால் உணவு விஷமாக மாற வாய்ப்புள்ளது. 3வது மைல் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டுனரின் கண்களில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே தாங்கள் மேற்படி FCI குடோனை நேரில் களஆய்வு செய்து விஷ வண்டுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.