சட்டவிரோத மது விற்பனை ஒருவர் கைது காவல்துறை நடவடிக்கை
வேலம்பட்டி அருகில் உள்ள பெரிய வாளையாபட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-25 09:32 GMT
சட்டவிரோத மது விற்பனை ஒருவர் கைது காவல்துறை நடவடிக்கை
சட்டவிரோத மது விற்பனை ஒருவர் கைது காவல்துறை நடவடிக்கை
சட்டவிரோத மது விற்பனை ஒருவர் கைது காவல்துறை நடவடிக்கை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புங்கம்பாடி பிரிவு அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜனவரி 23ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் புங்கம்பாடி பிரிவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அரவக்குறிச்சி தாலுகா,கணக்கு வேலம்பட்டி அருகில் உள்ள பெரிய வாளையாபட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் வயது 51 என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர்,அவர் விற்பனைக்கு வைத்திருந்த ஒன்பது குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், பெருமாள் மீது வழக்கு பதிவு செய்து, அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.