தாய் மகள் மாயம் - போலீஸ் விசாரணை !
சின்னசேலம் அருகே காணாமல் போன தாய், மகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-01 06:13 GMT
சின்னசேலம் அருகே காணாமல் போன தாய், மகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சின்னசேலம் தாலுகா, கருங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி கவுசல்யா,26; இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவர் பெரியசாமி வெளிநாட்டில் தங்கி பணிபுரிகிறார். கடந்த 29ம் தேதி கவுசல்யா தனது குழந்தையுடன் சின்னசேலத்தில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை என்பதால், மருமகள் கவுசல்யா மற்றும் பேத்தியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மாமனார் குப்புசாமி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.