புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது !
ஆலங்குடி அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-22 04:43 GMT
புகையிலைப் பொருட்கள்
ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் பகுதியில் பெட்டிக்கடைகளில் அரசினால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த நெடுவாசலை சேர்ந்த பால்ராஜ்(48), திருமுருகன்(35), உலகேஸ்வரன் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.