கல்லூரி பெண் நிர்வாகியை ரகசிய வீடியோ எடுத்து மிரட்டல் - கைது

கல்லூரி பெண் நிர்வாகியை ரகசிய வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-14 05:55 GMT

கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர்  ப்ரூக்ளின்ஸ்(37) . இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கும் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல கல்லூரியின் 30 வயதான பெண் நிர்வாகிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கல்லூரி பெண் நிர்வாகியுடன் முதலில் நட்பாக பழகிய ப்ரூக்ளின்ஸ் பின்னர் கோடிக்கணக்கான ரூபாய் பணம் புரளும் பெரிய தொழில் அதிபர் என தன்னைப்பற்றி கூறி பெண் நிர்வாகியுடன்  ஒரே அறையில் நெருக்கமாக இருந்துள்ளனர். அதை ரகசியமாக வீடியோ பதிவு செய்த ப்ரூக்ளின்ஸ் பின்னர் அதை காட்டி இளம்பெண் நிர்வாகியை மிரட்டி சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறித்திருக்கிறார். இந்த நிலையில் ப்ரூக்ளின்ஸ் பெண் நிர்வாகியுடன் இருக்கும் சில காட்சிகளை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண் நிர்வாகியும் தன் மன வேதனையை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். குடும்பத்தினரின் ஒத்துழைபோடு இளம் பெண் நிர்வாகி நேசமணி நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ப்ரூக்ளின்ஸுடன் சேர்ந்து அவரது மனைவி ரியா பிரசாத்தும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ப்ரூக்ளின்ஸை கைது செய்துள்ளனர். ப்ரூக்ளின்ஸுக்கும் வேறு சில பெண்களுக்கும் இதுபோன்று சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு இருந்துள்ளதாகவும், வீடியோ கால் சாட்டிங் உள்ளிட்ட சுமார் 300 வீடியோக்கள் அவரது மொபைல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News