போலீஸாா் தாக்குதல்- கிழிந்த ஆடையுடன் விவசாயிகள் தா்ணா
போலீஸாா் தாக்கியதில் ஆடை கிழிந்தததாக புகார் தெரிவித்து கிழிந்த ஆடையுடன் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
. திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், குமுளூா் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் அரசு நிலங்களை தனியாா் மனைவணிக நிறுவனத்தினா் ஆக்கிரமித்துள்ளதாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரையை, போலீஸாா் தாக்கியதில் அவரது ஆடை கிழிந்தததாக திருச்சி ஆட்சியரகத்தில் அவா் கிழிந்த ஆடையுடன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தகவலறிந்து வந்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா், இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக, அனைத்து சங்கங்களைச் சோ்ந்த தலைவா்கள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் இணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.