ஆட்டோ சங்கத்தினர் மீது போலீசில் புகார்

குமாரபாளையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றொரு ஆட்டோ சங்கத்தினர் மீது போலீசில் புகார் செய்தனர்.

Update: 2023-11-30 02:49 GMT

குமாரபாளையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றொரு ஆட்டோ சங்கத்தினர் மீது போலீசில் புகார் செய்தனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கற்பக விநாயகர் ஆட்டோ ஸ்டாண்ட், தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் என இரு ஆட்டோ சங்கங்கள் உள்ளன. கற்பக விநாயகர் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், ஆட்டோக்களை பஸ் ஸ்டாண்ட் உள்  பகுதியில் நிறுத்தி வைத்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு வருகின்றனர். தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் பஸ் ஸ்டாண்ட் வெளியில் பயணிகளை ஏற்றிகொண்டு வருகிறார்கள். இதனால் தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோக்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் கற்பக விநாயகர் ஆட்டோ  ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் சேலம் சாலையிலும்  தங்கள் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் புகார் கொடுத்தனர். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்களுக்கு ஆதரவாக போலீசாரிடம் பேசினார். இன்ஸ்பெக்டர் தவமணி இது குறித்து விசாரணை செய்து நல்லதொரு தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறி அனைவரையும் அனுப்பி வைத்தார். குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குழுமியிருந்ததால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இதனை வேடிக்கை பார்க்க திரண்டனர்.
Tags:    

Similar News