500 கிலோ ரேஷன் பருப்பு பறிமுதல் செய்த காவல்துறையினர்
ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சோதனையில் ஈடுப்பட்ட போது 500 கிலோ ரேஷன் பருப்பை பறிமுதல் செய்தனர்;
500 கிலோ ரேஷன் பருப்பு பறிமுதல் செய்த காவல்துறையினர்
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் காரில் பருப்பு மூடைகள் கடத்தி செல்லப்படுவதாக கருங்கல் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருங்கல் நோக்கி வந்த சொகுசு காரை போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் காரை சோதனை செய்தபோது, அதில் பொது மக்களுக்கு ரேஷன் கடையில் மானிய விலையில் வழங்கப்படும் பருப்பு மூட்டையாக மொத்தம் 300 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கருங்கல் போலீசார் கிள்ளியூர் வட்ட வழங்க அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாதாபுரத்தில் இருக்கும் அந்த வாலிபரின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் அவர் வீட்டில் மேலும் 200 கிலோ பருப்பு பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மொத்தம் 500 கிலோ பருப்பை பறிமுதல் செய்து அதிகாரிகள் கிளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு அனுப்பினர். பறிமுதல் செய்த காரை கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.